search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயோ டாய்லெட்"

    நாட்டிலேயே முதல்முறையாக ‘பயோ டாய்லெட்’ வசதியுடன் போலீசாருக்கு நிழற்குடை கோவையில் நிறுவப்பட்டுள்ளது. #Biotoilet
    கோவை:

    போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபடும் போலீசார் ரோட்டின் நடுவே காலை முதல் இரவு வரை பணியாற்ற வேண்டும்.

    அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றால் அருகே உள்ள நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக பெண் போலீசார் அதிகமாக சிரமப்படுகிறார்கள்.

    இதுபோன்ற சிரமங்களை தவிர்க்க கோவையில் போக்குவரத்து போலீசாருக்கு ‘பயோ டாய்லெட்’ வசதியுடன் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. அவினாசி சாலையில் அரசு மருத்துவ கல்லூரி சிக்னலில் இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    நாட்டிலேயே முதல்முறையாக ‘பயோ டாய்லெட்’ வசதியுடன் போலீசாருக்கு நிழற்குடை கோவையில் நிறுவப்பட்டுள்ளது. டைடல் பார்க்கில் உள்ள சில நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதை வடிவமைத்து தந்துள்ளனர். இதன் மொத்த செலவு ரூ.1.25 லட்சம் ஆகும்.

    வாகன புகையில் இருந்து போலீசார் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் கண்ணாடி அறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி அறையில் அமர்ந்து கொண்டு போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபடலாம். இரவு நேரங்களிலும் லைட் உள்ளிட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் இதே போன்று நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  #Biotoilet
    ×